அனைவருக்கும் வணக்கம்
தொன்மையான நாகரிக்கத்தின்
தொடர்ச்சியாக இன்றளவும் உலகில் உயிர்ப்புடன் இருக்கும் இனம் தமிழினம். அதனுடன் இருந்த
சுமேரிய ,எகிப்து யவன நாகரிகங்கள் இன்று வெறும் நினைவுகளாக உள்ளது. தமிழினம் மட்டுமே
தன் தொன்மையை கலாசாரத்தை பண்பாட்டை உயிர்ப்புடன் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. வேட்டையாடிய
மானுடம் விலங்குகளை தேர்ந்தெடுத்து தங்களுக்கு உதவ காளைகளை ,யானைகளை குதிரைகளை அடக்கினான்
அதன் தொடர்ச்சியே தமிழர் கலாச்சாரமான எருது தழுவுதல் மஞ்சு விரட்டு ஜல்லிக்கட்டு. சங்க
இலக்கிய ஆநிறை கவர்தல் என்று போற்றிப் பாடும் இந்த வீர விளையாட்டுக்கு தடைகள் பல கடந்து
உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம்.
இன்றைய தமிழினத்தின்
நிலை என்ன?
தலைமை இல்லாததா
பிரச்சனை அல்ல தமிழினம் குழப்பத்தில் இருப்பதுதான் பிரச்சனை. தமிழர் யார் என்பதில்
பிரச்சனை.... மானுடவியல் ( Anthropology) உடன்
இனவியலை, சமூகவியலை குழப்பிக் கொண்டோம். திராவிடர்கள் என்று மூளைச்சலவை செய்யப்பட்டு நிலம் குறுகி, இனம் அடித்து விரட்டபட்டு
உள்ளது. உண்மை புரிந்து தன் இனம் காக்க இளையவர்கள் துடிப்புடன் இருக்கிறார்கள். சமூக
வலைதலங்கள் மூலம் அறிகிறோம்.
மகோன்னதமான
சரித்திரம் படைத்த தமிழினம் எப்படி வீழ்ந்தது என்பதை நாம் அறியும்போது நமக்கு தெளிவு கிடைக்கும். எத்தனையோ புதுமைகள் வந்தபோதும் இயற்கை விவசாயமே ஆரோக்கியதிற்கு பண்பாட்டிற்கும்
மண்வளதிற்கும், நீர் வளதிற்கும் அடிப்படை என்பதை உலகமே உணர்வதுபோல அந்த விவசாயத்தை
உலகிற்கு தந்த தமிழினம் மீண்டும் தன் நிலை உணர்ந்து மீண்டு எழ நினைக்கிறது. .இளையவர்களிடம்
காணப்படும் எழுச்சி நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரம் இந்த எழுச்கி வீணாகாமல், சரியான
புரிதல் வழிகாட்டுதல் இவற்றுடன் தனது இனத்தை உலகம் உள்ளளவும் தொடர இளையவர்களுக்கு உதவ வேண்டும்.
Revivetn –
Revive என்பதன் பொருள் உயிர்பூட்டு, உயிரளி,
விருத்தி அடை, மீண்டும் புத்துயிர் அளி. தமிழினத்திற்கு தமிழர்களுக்கு தமிழ் மொழிக்கு புத்துயிர் தருவதும்
அரசியல் என்கிற பெயரில் தமிழர்களை அடக்க ,அழிக்க
,ஒடுக்க நினைப்பதும், இதற்கு தமிழர்களை கொண்டே செய்வதும்,ஆயிரம் காலமாக நடைப்பெற்று
வருவது. ஒவ்வொரு முறை தமிழர் இன வெழுச்சி ஏற்படும் போது அதனை பக்தி என்கிற போர்வையில்
திசை திருப்புவதும் ,ஆரிய ,திராவிட என்று குழப்புவதுவும், பார்ப்பன எதிர்ப்பு என்று
சமூக நீதி காட்டுவதாக நடிப்பதும் இது போதாது என்று கலை என்கிற பெயரில் தாசி கலாசாரத்தை, அரசியலை வளர்ப்பதும்
ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களை அழிக்க பயன்பட்ட கருவிகள்..ஆட்கள் மாறுவார்கள் உடைகள் மாறும்
ஆனால் எண்ணமும் செயலும் வாழ வந்த வந்தேறிகளுக்கு ஒன்றுதான். ஐரோப்பியர்களின் வணிக அரசியல்
உலகிலுள்ள பல பூர்வ குடிகளை அழித்தது மட்டுமல்ல பல ஆசிய ஆப்ரிக்க,தென் அமெரிக்க நாகரிகத்தின் சமூக கட்டமைப்பை தலைகீழாக புரட்டிப்
போட்டது அதுவே இன்றளவும் ஆசிய ஆப்ரிக்கா தென் அமெரிக்க நாடுகளில் நிலவும் அமைதியின்மை.
மேற் சொன்ன
அனைத்தும் அரசியலில் இயல்பானது.எத்தனை அரசியல்
கோட்டபாடுகள் தத்துவங்கள் வந்தாலும் ,அரசராட்சி என்றாலும் மக்களாட்சி என்றாலும்,
Capitalism Communism
Corporatism,Periyarism, Dravidianism Dalitsm எதுவாக இருந்தாலும் அடிப்படை தத்துவம்
Survival of the Fittest.- Darwin Theory ஒன்றே
உண்மையானது. இயற்கை அழிவிலிருந்தும் அரசியல் ஆக்கிரமிப்பில் இருந்தும் யுகங்களாக தன்னை
காப்பாற்றி கொண்ட தமிழினம் இனியும் தன்னை காப்பாற்றிக் கொள்ளும்.
அதற்கு சமுகவியல்
Sociology பற்றி அறிய வேண்டும். Sociology பரந்து விரிந்த இயல். இதில் மானுடவியல்,இனவியல்,வரலாறு,
அரசியல் சமூக கட்டமைப்பு, பொருளாதாரம் அனைத்தையும் உள்ளடக்கியது. இந்த தளத்தில் நாம்
தமிழர் பிரச்சனைகளை மட்டுமே பேசப்போவதில்லை அறிவுரை கூறப்போவதில்லை, மறக்கப்பட்ட வரலாறு
பக்கங்களை பார்க்கப்போகிறோம்., சமூக பொருளாதரா வளர்ச்சியைப் பற்றியும் அதனை நடைமுறைபடுத்த
என்ன செய்வது என்பதையும், தமிழரிடையே அரசியல் விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு,
எல்லாவற்றிக்கும் மேலாக மத்திய மாநில அரசுகளின் பாராளுமன்ற சட்டமன்ற தீர்மானங்கள் மக்களுக்கு
தெரியப்படுத்துதல் .அரசு செய்வது எதுவுமே ,சட்டம் உட்பட மக்களுக்கு தெரிவதில்லை. பல
சட்டங்கள் திருத்தி மாற்றி அமைக்கப்படுவதும் தெரிவதில்லை.இன்றைக்கு ஆண்டாள் போன்ற தேவையற்ற
பிரச்சனைகள் கிளப்பிவிட்டு அதனை ஊடகங்கள் தொடர்ந்து பிரசாரம் செய்ய, அடுத்து தமிழ்
தாய் வாழ்த்து என்று சொல்ல, ,தமிழின போர்க்குடிகளான பரதவர் வாழ்வில் பேரிடியாக இலங்கை
எல்லை கடற்கரை தீர்மானம் வந்துள்ளது. அதனைப் பற்றி பேசவோ விவாதிக்கவோ மத்திய மாநில அரசுகள் ஊடகங்கள் தயாராக இல்லை. இதுதான் தமிழர்
நிலை,தமிழர் அரசியல்,அரசியல் பின்னணி. இம்மாதிரியான மக்களை திசை திருப்புசர்ச்சைகள்
திட்டமிட்டே பரப்ப படுகிறது. இச்சர்ச்சைகள் நாம் எதிர்க்கும் அதே நேரம் அதன் பின்ணனி
யார் என்பதையும் இளையவர்கள் யோசிக்க வேண்டும். எந்த அரசியல் தீர்மானத்தை அறியாமல் செய்வதற்கோ
என்கிற ஐயம் ஏற்பட வேண்டும். இந்திய அரசியல் இப்படிதான் பிரிட்டிஷ் காலம் முதல் நடந்து
வருகிறது. பிரிட்டிஷ்காரன் மட்டும்தான் வெளிய சென்றுள்ளன் அவனது அரசியல் ஆட்சிமுறை
சட்ட திட்டங்கள்,அவனது பிரித்தாலும் கொள்கை எதுவுமே போகவில்லை.
மாற்றங்கள்
ஒன்றுதான் மாறாதது என்பது பசும்பொன் தேவர் அய்யவின் கூற்று. சமூக பொருளாதார மாற்றங்கள்
மக்களிடமிருந்துதான் ஏற்படும். 20 வருடம் முன்பு இயற்க்கை வேளாண்மை சிறு தானியங்கள்
பெருமை எத்தனை பேருக்கு தெரியும் இன்று Corporate சந்தை கூட இயற்கை விவசாய பொருட்களை
அதிக விலை வைத்து விற்கிறது. என்வே மக்கள் மாற்றி யோசித்தால் போதும். அதனை சரியாக செயல்
படுத்த தெளிவு படுத்த இந்த தளம் உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பித்து இருக்கிறேன்.
முன்பு எனது
எண்ண ஒட்டதை ‘the flashpoint’ என்கிற தளத்தில்
பதிவு செய்திருந்தேன்.கடந்த மூன்று வருடங்களாக மதுரைவாசியாக அதுவும் 20 கிலோமீட்டர்
தள்ளி கிரமத்தில் வாழ்ந்து பார்க்கும் போது எத்தனை இழந்து இருக்கிறோம் எப்படியெல்லாம்
அரசியல் என்கிற போர்வையில் தமிழினம் ஏமாற்றப்பட்டு அடக்கபட்டு வந்துள்ளது என்பதை தெளிவாக
அறிய முடிந்தது.
தமிழர்களுக்கு
கிடைத்துள்ள மிகப்பெரிய நன்மை சமூக வலைதளங்கள். தமிழர்களின் குரல்,அவர்களது எதிர்ப்பு,
அவர்களது வரலாறு, அவர்களது பிரச்சனைகள் எதுவுமே
வெளியுலகுக்கு தெரியாமல் பிற தமிழர்களுக்கு தெரியாமல் ஊடகங்கள் மறைத்து வைத்து இருந்தன
.இன்று தமிழர்களைப் பற்றிய பல செய்திகள் உலகமெங்கும் அறியப்படுகிறது,
இந்த புதிய
தளத்தின் மூலம் பல நல்ல உபயோகமான உருப்படியான தகவல்கல் செயல் திட்டங்கள் தமிழர்கள் நலம் காக்க, ஏற்படும் என்று நம்புகிறேன்.
இந்த தளத்தை வடிவமைத்து தந்த வேலம்மாள் பொறியியல்
கல்லூரி செல்வகுமார் , நவீன் பிரசாத் , லிங்கேஸ்வரன்
மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
ஒன்றுபடுவோம்
வென்று எடுப்போம்.
வாழ்க தமிழர்
வளர்க அவர்தம் வாழ்வு.
முனைவர் மஞ்சு
கணேஷ் தேவர்.
No comments:
Post a Comment